தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் ரெட் கிராஸ் ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்த வங்கி மருத்துவர் ராஜ்குமார் தலைமை அளித்த தஞ்சாவூர் மிட்டான் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுரேஷ் வீரமணி புகைப்படக்கலைஞர் பரணி ரெட் கிராஸ் வாழ்நாள் உறுப்பினர் உதயகுமார் மற்றும் மாணவர்கள் பலர் ரத்ததானம் செய்தனர். இதில் ரெட் கிராஸ் மாவட்ட துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் செயலாளர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.