குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரை ஊராட்சியில் உள்ளது குழந்தை கவுண்டன்பட்டி. இந்த கிராமத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக போதுமான குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. மூன்று ஆள்துளை கிணறுகள் அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் மூன்று ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அதே கிராமத்தின் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் செல்லும் பைப் லைன் இருப்பது குறிப்பிடத்தக்கது.