தர்மபுரிமாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த வட்டகானம்பட்டியை சேர்ந்த பேக்கரி மாஸ்டர் சந்தோஷ் இவரது மனைவி திரெளபதி (30) சந்தோசுக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் (37) என்பவருக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தோசின் மனைவி திரெளபதி அவருடைய நிலத்தில் தீவன புற்களை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகேஷ் தீவனபுல் அறுக்க கூடாது என தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.