சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தங்கமணி நகர் பகுதியில் சுப்பையா (39) என்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மது பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென அவர் தூக்கிட்டு உயிரிழந்தார்.