தஞ்சை அருகே புதுப்பட்டினம் மற்றும் வெட்டிக்காடு பகுதியில் ஒடும் கல்லணை கால்வாய் ஆற்றில் இரண்டு ஆண் சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியதாக தஞ்சாவூர் தாலுகா போலீசாருக்கு பொதுமக்கள் தரப்பில் தகவல் தெரிவித்தனர். அந்த இரு இடங்களுக்கும் சென்ற தாலுகா போலீசார் அடையாளம் தெரியாத அந்த இரண்டு ஆண் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.