தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகன் செண்பகராஜ், முருகன் மகன் பலவேசம். இவர்கள் இருவரும் நண்பர்கள், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். அதே கல்லூரியில் படித்து வரும் முத்துக்குமரன் மகன் ஆதித்யா (19) என்பவருக்கும் பலவேசத்துக்கும் இடையே முன் விரோதம் காரணமாக நேற்று பிற்பகலில் சண்டை ஏற்பட்டது.