தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த மூணாம் தேதி மாலை 6 மணி அளவில் புத்தகப் பையுடன் வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமியை இரண்டுக்கும் மேற்பட்ட நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. சட்டென்று அந்த சிறுமி அந்த நாய்களிடமிருந்து தப்பித்து தனது வீட்டிற்குள் புகுந்து தப்பினார். மேலும் அதைத் தெருவில் நடந்து வந்த சிறுவர்களையும் நாய்கள் துரத்திய காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.