தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை கல்லூரி மற்றும் கால்நடை ஆராய்ச்சி பண்ணை இயங்கி வருகிறது இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டு இன வகை கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கால்நடை பண்ணைக்கு சொந்தமான 500 ஏக்கர் ஆராய்ச்சி நிலங்களை சிப்காட் அமைக்க தமிழக அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது இந்த முயற்சியை கைவிட வலியுறுத்தி பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.