தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மறவன் மடத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், பொட்டலூரணி பகுதியில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மீன் கழிவு ஆலைகளை மூட வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.