தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெண்டிகானஅள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 17லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டும்பணியை தொடங்கி வைத்தார்.