சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகே உள்ள மணக்கரை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் மணக்கரையிலிருந்து சாமியார்பட்டி வரை ஆறு கிலோமீட்டர் தூரம் என பந்தய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, தஞ்சாவூர்–மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது.