தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சிறுபான்மையினருக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தகவல்.