சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் உள்ள பெரிய தெப்பக்குளத்தின் கிழக்குப் பகுதியில் கல்வெட்டு ஒன்று இருப்பதை நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தொல்நடைக் குழுவிற்கு தெரிவித்தனர். இதையடுத்து, தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, செயலர் இரா. நரசிம்மன் ஆகியோர் கல்வெட்டைக் களத்தில் ஆய்வு செய்தனர்.