தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் இவரது கணவர் சுப்பையா என்பவர் தற்போது தெர்மல் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கண்ணமாளை கடந்த 1994 ஆம் ஆண்டு சுப்பையா தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் இதைத்தொடர்ந்து கண்ணம்மாள் சுப்பையா இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.