சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் இயக்குனர் கரு. பழனியப்பன் ஏற்பாட்டில் மத நல்லிணக்க மீலாது விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது சகோதரர் இஸ்லாம் மதத்தை தழுவிய பழனியப்பன் என்ற முஜாஹிதீன், இயக்குனர் அமீர் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் இந்து சமூதாயத்தினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பேசியதாவது: “20 ஆண்டுகளுக்கு முன்பு கரு. பழனியப்பனின் சகோதரர் பழனியப்பன் (முஜாஹிதீன்) இஸ்லாம் மதம் தழுவியதையடுத்து உறவினர்களால் ஒதுக்கப்பட்டார்