அரியலூர் நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் நிறுவபட்டிருந்த விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைப்பெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. பின்னர் விநாயகர் சிலை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றபட்டு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தது. பின்னர் மருதையாற்றில் விநாயகர் சிலை கரைக்கபட்டது.