சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை – 2025 விளையாட்டுப் போட்டிகள், பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் நடைபெற உள்ளன. போட்டிகளில் இணையதளம் வாயிலாக பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் அனைவரும் தங்களுக்கான தேதியிலும், இடத்திலும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி, தெரிவித்துள்ளார்.