நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள மரப்பாலம், சாண்ட்லோ காஸ்ட்லி ரிசாட் பகுதியில் புலி ஒன்று தேயிலை தோட்ட பகுதிகளில் தென்பட்டது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது