அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வரதராஜன்பேட்டையை சேர்ந்த அருளப்பன் என்பவர் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அருளப்பனை கைது செய்து 480 கிராம் ஹான்ஸ், 1 கிலோ பான் மசாலா, 126 கிராம் புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல்.