சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், வைகை ஆற்றில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வீசப்பட்ட சம்பவத்தில் நில அளவைத் துறை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் தொடர்பாக அளித்த மனுக்கள், வைகை ஆற்றில் வீசப்பட்ட நிலையில் கிடைத்தது.