செப்டம்பர் 25ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேடசந்தூருக்கு வருகை தர உள்ளார். இதனை அடுத்து வேடசந்தூர் தொகுதி நிர்வாகிகள் அவர் பேசுவதற்கான தகுந்த இடத்தை தேர்வு செய்ய ஆலோசனை நடத்தினர். இதில் கருக்காம்பட்டி ரோடு ஒட்டன்சத்திரம் ரோடு ஆகிய பகுதிகளில் எந்த இடம் சிறப்பாக இருக்கும் என்பதை ஆய்வு செய்தனர். மேலும் அவர் பேசும் பொழுது குறுக்கே ஆம்புலன்ஸ் போகாமல் இருக்க மாற்று வழி இருக்கிறதா என்பதையும் ஆலோசனை செய்தனர்.