தஞ்சாவூர் அரசு மன்னர் சரபோஜி கலைக் கல்லூரி வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் யுஜிசி சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யுஜிசி சட்டத்திருத்தம் மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக சட்டத்திருத்த மசோதா நகலை எரிக்க முயன்ற மாணவர்களுக்கும் அதை தடுக்க முயன்ற காவல் துறையினருக்கும் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.