தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றன இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான நாட்டுபடகுகள் கரை திரும்பின.இதன் காரணமாக மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஓணம் பண்டிகை காரணமாக விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்களை வாங்க இன்று பொது மக்களின் கூட்டம் அலை மோதியது.