அரியலூர் பேருந்து நிலையம் அருகே இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் கிளை சார்பில் போதைபொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.