தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். இதில் அக்கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜே.கே.ஆர் முருகன் தலைமையிலான கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.