சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 184 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 958 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட கஞ்சா பொருட்கள், நீதிமன்ற உத்தரவு பெற்று எரித்து அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எரிவாயு கூடத்தில் நடைபெற்றது.