தஞ்சாவூர் திருவையாறு பைபாஸ் சாலையில் 8நெம்பர் கரம்பை பகுதியில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பைபாஸ் சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். திருவையாறில் இருந்து தஞ்சைக்கு வரும் போது இந்த மேம்பாலத்தில் இறங்கும் பகுதியில் பாலம் வளைவு பகுதியை அறிவிக்கும் ரிப்ளெக்டர்கள் பொறுத்தப்பட்டு இருந்தன. ஆனால் இதில் 3 ரிப்ளெக்டர்களை சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விட்டனர். வெறும் இரும்பு கம்பிகள் மட்டுமே உள்ளன. இதனை உடன் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.