புதுக்கோட்டை மாவட்டம் பாண்டிபத்திரம் கிராமத்தில் ஊர் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டுவண்டி போட்டிகள் இன்று நடைபெற்றன. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் ஏராளமான மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களுடைய மாடுகளை போட்டியில் பங்கேற்க வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.