தூத்துக்குடி நிகிலேசன் நகர் அருகே உள்ள காந்தி நகரில் வசிப்பவர் ராஜன் மகன் ரவி, இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது தாயார் சரஸ்வதி வசித்து வருகிறார். அதே தெருவில் உள்ள தனது மூத்த மகன் சுரேஷ் பாபு என்பவர் வீட்டுக்கு தனது வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில், இன்று காலை வீட்டை திறக்க வரும்போது வீட்டில் உள்ள கதவுகளில் உள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.