அரியலூர் மாவட்டம் தா. பழூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். இதனையடுத்து தா.பழூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்களை பார்வையிட்டனர்.