சிவகங்கை அரண்மனைவாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் சிவகங்கை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 19 உடல்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்றுவரும் 100 ஆண்கள் இந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்றனர். 40 கிலோ மற்றும் 50 கிலோ என எடை பிரிவை கொண்டு தனி,தனியே நடைபெற்ற இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.