வேடசந்தூர் ஆத்துமேட்டில் கப்பலோட்டிய தமிழர் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை வேடசந்தூர் பிள்ளைமார் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதிமுக, திமுக, தேமுதிக, இந்து முன்னணி பிரமுகர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் மரியாதை செலுத்தினர்.