தஞ்சாவூர் மாவட்டம் கொல்லங்கரையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தங்களுக்கு பட்டா உள்ளதாக கூறி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தப் பாதையில் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு சென்று பட்டா இருந்தால் உத்தரவு பெற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்தப் பாதை வழியாக நடந்து செல்லும் மாணவ மாணவிகளை மூதாட்டி குச்சியை வைத்து தடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.