நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள 3 டிவிஷன் பகுதியில் இன்று அதிகாலை உலா வந்த காட்டு யானை கங்காதரன் என்பவரது வாழை தோட்டத்தை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. இதில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்