பரமக்குடி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே இன்று காலை பெரும் சாலை விபத்து ஏற்பட்டது. பிள்ளையார்பட்டியில் இருந்து பரமக்குடி நோக்கி சென்ற கார், எதிரே வந்த மற்றொரு கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகிய மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இந்த விபத்தில் மொத்தம் ஆறு பேர் காயமடைந்தனர்.