வேடசந்தூர் ஒன்றிய இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. 38 சிலைகள் கொண்ட ஊர்வலம் நேருஜி நகர் ஐயப்பன் கோவில் முன்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏ டி எஸ் பி மகேஷ், வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஆத்து மேடு சென்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அடைக்கனுர் அருகே குடகனாற்றில் சிலை கரைக்கப்பட்டது.