அழகாபுரியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது மகள்கள் காவியா, கமலி, பேத்தி இனியா ஆகியோருடன் அம்மாபட்டியல் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு மீண்டும் அழகாபுரியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அம்மாபட்டி தாண்டி ஒரு வளைவில் சென்ற பொழுது எதிரே வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நால்வரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.