அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் அரியலூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார்.