*கிருஷ்ணகிரி அருகே அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை – வீடியோ வைரல் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மன் கோயில்பதி கிராமத்தில், அதிகாலை 6 மணி முதலே மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.அப்பகுதியில் அருகருகே உள்ள மூன்று கடைகளில் பெண்களே நேரடியாக மதுபானங்களை விற்பனை செய்து வரும் காட்சி வைரல்