தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளை தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6வது புத்தக கண்காட்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்று பார்வையிட்டார்.