சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (64) என்பவரின் ஆட்டை, அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி (53) என்பவரின் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் ராஜேந்திரன், தனுஷ்கோடியின் நாயை விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.