நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மண் சரிவுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருவது மட்டுமின்றி குடியிருப்புகளுக்குள் விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. அதன்படி கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை, புளியம் வயல் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கபட்டுள்ளது