நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக சந்தை நடக்கிறது. இன்று செப்டம்பர் 09 நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் & வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். சிறிய அளவிலான ஆடுகள் 3800 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 24,000 ரூபாய் வரை மொத்தம் 48 லட்சத்துக்கு ஆடுகள்வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.