சிவகங்கை செந்தமிழ் நகர் சிந்தாமணி தெருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் வேலை வாய்ப்பு தேடியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி, அவருக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. அதை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது, சிறிது நேரத்தில் வாட்ஸ்அப் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டார். அந்த நபர், குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.