வேடசந்தூரில் இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பூத்தாம்பட்டியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட சரக்கு வாகனம் சிலையை கரைத்து விட்டு மீண்டும் சென்ற பொழுது அரசு ஆஸ்பத்திரி முன்பாக எதிரே வந்த லாரி மோதியது. இதில் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.