தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூரில் விளாத்திகுளம், புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இதில் கந்தசாமிபுரம், மணியக்காரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்து இந்த பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி மூலமாக விவசாய கடன் பெற்றுள்ளனர்.