வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி பகுதியில் ஒரு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் பணியாற்றிய இளைஞர் அஜித்குமாருக்கும் இளம்பெண் ஹேமலதாவுக்கும் காதல் ஏற்பட்டது. 18 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் காதலர் காதலியை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இளம் பெண் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. காதலர்கள் இருவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.