சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அமர்விப்பது என்.டி.ஏ கூட்டணியின் கடமை” என்று உரையாற்றினார்.