நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய தினம் அதிகாலை கூடலூர் பஜார் அருகே உள்ள வீட்டின் வெளியே படுத்திருந்த வளர்ப்பு நாயை அங்கு உலா வந்த சிறுத்தை கவ்வி சென்றது. இதன் CCTV காட்சி இன்று பகல் வெளியாகி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது