கும்பகோணம் அடுத்த கொத்தங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் இடத்தகராறில் கீழே தள்ளி விடப்பட்டு இறந்தார். அவரது உடலை சுவாமிமலை போலீசார் கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். இந்நிலையில் இன்று மதியம் சேகரின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.